ரணில் அரசாங்கத்துடன் இணைவதற்கான திட்டம் இல்லை: ராஜித பதில்
தற்போது அரசாங்கத்துடன் இணைவதற்கான எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சின் போது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் இன்று (06.03.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசில், அவர் கடந்த காலங்களில் வகித்து வந்த சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது என வெளியான செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஜனாதிபதியின் அண்மைக்கால வேலைத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களைப் பாராட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித வெளியிட்ட சில அறிக்கைகளால் அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்களின் விமர்சனத்தை எதிர்நோக்கினார்.
மேலும் சுகாதார அமைச்சர் போன்ற ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால், நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் முக்கிய பங்காற்ற முடியும் என கடந்த வாரம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan