பட்டிருப்பு பாலத்தை அமைப்பதற்கு நான் முன்னுரிமை வழங்குவேன்: பந்துல குணவர்த்தன(Photos)
ரணிலின் அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்வதங்குரிய இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது. அந்த செயற்றிட்டம் நிறைவடைந்தால் அடுத்த ஆண்டு பட்டிருப்பு பாலத்தை அமைப்பதற்கு நான் முன்னுரிமை வழங்குவேன் என ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்று (31.08.2023) விஜயம் செய்திருந்த அவர் பல்வேறு அபிவிருத்தித்திட்ட பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது புனரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி கண்ணககை அம்மன் வீதியை திறந்து வைத்து கருத்துத் தெரிவிக்கையியே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
''மாணவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட வீதியை
அடுத்த வருடம் செப்பனிட்டுத் தருவேன். வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஆவணமாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார விடுதலையைப் பெறுவதற்கு நடவடிக்கை
எனினும் ஆவணங்களில் இருந்தாலும் கையிலே இல்லாமல் உள்ளது.
கடந்த 30 வருடங்களாக ஏற்பட்டிருந்த யுத்த நிலமையை நான் கூறித்தான் மக்கள் அறிய வேண்டியதில்லை.
இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கின் வசந்தம், கிழக்கின் உயதம், ஆகிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாமலிருந்த கிறவல் வீதிகள் அனைத்தும் கார்பட் வீதிகாக அமைக்கப்பட்டன.
அதிகளவு பாலங்கள் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டன. நான் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் மாணவர்களின் நலன்களுக்காக பல்வேறு பாடவிதானங்களை மையப்படுத்தி தொழில்நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்தியிருந்தேன்.
இந்த நாட்டிலே ஏனைய பிரதேசங்களில் அமைக்கப்பட்டது போன்று கிழக்கு மாகாணத்திலும் 100இற்கு மேற்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப விஞ்ஞான கூடங்களை அமைத்துக் கொடுத்தேன்.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விடுபடமுடியும்
வாழ்க்கையில் ஒரு நாளும் கணிணியைக் கையாளாத மாணவர்களுக்கு நான் கணிணிக் கல்வியை அறிமுகம் செய்து கொடுத்தேன். விவசாயம் உள்ளிட்ட பல முறைகளிலும் நான் பல துறைகளிலும் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டிருந்தேன்.
தற்போது பொருளாதார
விடுதலையைப் பெறுவதற்கு நாம் பாரியதொரு வேலைத்திட்டங்கைள மேற்கொள்ள
வேண்டியதுள்ளது. நாங்கள் அனைவரும் ஜாதி, மத வேறுபாடுகளின்றி ஒன்றுபட்டு
செயற்பட்டால் இந்த நாட்டிற்கு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விடுபடமுடியும்.
எனவே ஒற்றுமையை விரும்பி செயற்படுகின்ற பிள்ளையான் அமைச்சரின் ஆர்வத்திற்கு நானும் ஜனாதிபதி அவர்களும் மேலும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளோம். எனவே அடுத்த ஆண்டு பிள்ளையான் அமைச்சருமன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.'' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
