பிரமாண்ட பிரச்சார கூட்டத்தில் ரணில் : நாளை முதல் ஆரம்பம்
உண்மை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு குளியாபிட்டிய மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் பங்கேற்கும் முதலாவது பொதுக்கூட்டம் இதுவென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
தற்போது கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக ரணில் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அகிலவிராஜ் காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்காலத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும்.
இறுதியில் அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
