கல்வி முறைமையை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்படாது: ஜனாதிபதி
நாட்டின் கல்வி முறைமையை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை ராஹுல கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்வி முறைமையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது எனவும் அதனை தடுக்க புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால நடவடிக்கை
நாட்டின் எதிர்காலம் கல்வியிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. 21ம் நூற்றாண்டுக்கு பொருந்தக்கூடிய வகையில் கல்வி முறைமையை உருவாக்கி சர்வதேசத்தில் இலங்கையின் பெயரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்வி முறைமையை உருவாக்குவதற்காக புதிய அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.