2024 ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல்: ஆணைக்குழுவுடன் ரணில் ஆலோசனை
அடுத்த வருடம் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவேண்டும். ஆனால், அந்த வருடம் ஆரம்பத்தில் அதாவது ஜனவரி அல்லது பெப்ரவரி அல்லது மார்ச்சில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி கடந்த வாரம் இந்தியா செல்வதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளார்.
தேர்தல் செலவுக்கான நிதி
மேலும், அடுத்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்திலும் இந்தத் தேர்தல் செலவுக்கான நிதி ஒதுக்கப்படவுள்ளது.
அதன் அடிப்படையில், குறுகிய காலத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கான முறைமை ஒன்றைத் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
