தமிழர்களின் வாக்குகளை அபகரிக்க ரணில் சதி: நளின் பண்டார குற்றச்சாட்டு
எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவே அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வுக்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தேவை என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.
13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு முன் அந்த 13இற்குள் இருக்கின்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை முதலில் நடத்த வேண்டும்.

13 ஆவது திருத்தச் சட்டம்
இந்நிலையில் நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருக்கின்றது.
எதிர்கால ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக அவர்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவே 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசுகின்றார்.

இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். இதற்காகத்தான் நாம் கடந்த சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 18 மணி நேரம் முன்
தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்... செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி Cineulagam
ஸ்ரீலீலா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஷார்ட் உடையில் பார்பி போல வந்த வீடியோ Cineulagam