ரணில் மத்திய வங்கி மோசடியில் சிக்கியிருந்தால் பெருமைப்படுத்தியிருப்போம்! சாடும் எதிர்தரப்புகள்
மத்திய வங்கி மோசடிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தால், உலகத்தின் முன் அதைப் பற்றி பெருமையாகப் பேசியிருப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரச தலைவரின் ஆளுமை
“ஒரு வளமான நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஜனாதிபதி ஒருவர் வெளிநாடு செல்லும்போது, ஒரு அரச தலைவரின் ஆளுமைக்கு ஏற்ற உயர்ந்த வசதிகளை அவர் அனுபவிப்பது சாதாரணமானது.
அரச தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அவர்கள் அந்த நாட்டிலுள்ள சிறந்த மக்களுடன் பழகுகிறார்கள். அவர்கள் சிறந்த மது மற்றும் தேநீர் அருந்திக்கொண்டே வேலை செய்கிறார்கள்.
மக்கள் செல்வத்தை உருவாக்கக்கூடிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பும் ஒரு நாட்டுத் தலைவர் இப்படித்தான் செயல்படுகிறார். ஜனாதிபதிகளே சிறந்த நாடுகளை உருவாக்குகிறார்கள்.
லண்டன் ஓட்டலில் இருந்து சாப்பிடுவதால் நாடு வீழ்ச்சியடையும் என்பதல்ல. ஒரு ஜனாதிபதிக்குத் தேவையான ஆளுமையும் அது உருவாக்கித்தரும் சூழலும் அப்படித்தான் உருவாக்கப்படுகின்றன.
இந்தியாவை வளர்ப்பதற்கு முன்பு மோடி ஒரு தனியார் ஜெட் விமானத்தில் அமெரிக்கா சென்றார். அந்த நாட்டின் ஆளுமை தொடர்பான புரிதல் சர்வதேச அளவில் அவ்வாறுதான் கட்டமைக்கப்படுகிறது.
நண்பர்களின் வீடுகளில் ஜனாதிபதி
தற்போதைய ஜனாதிபதி பல்வேறு நாடுகளுக்குச் சென்று நண்பர்களின் வீடுகளில் தங்கி, அரசு செலவுகளுக்காக ஒதுக்கிய பணத்தைத் திரும்பக் கொண்டு வந்து பெருமையுடன் ஒப்படைப்பார்.
அந்த செயலைச் செய்ய வேண்டாம் என்று நான் அவரிடம் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதனால்தான் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைப் பார்க்கும்போது நாம் வெட்கப்படுகிறோம்.
நாம் பெரிதாக சிந்திக்க வேண்டும். வரலாற்றில் பெரிதாக சிந்தித்த ஒரு தேசம் நாம். நம் முந்தைய தலைமுறையால் பராக்கிரம சமுத்திரத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
தற்போதைய அரசாங்கம்போல் நினைத்திருந்தால் தண்ணீர் தேடும் கிணறுகளே கட்டப்பட்டிருக்கும்.
இரண்டிலிருந்தும் நாம் தண்ணீரைப் பெற முடியும். ஆனால் கிணறுகளைத் தோண்டும் அரசாங்கங்களும் பராக்கிரம சமுத்திரத்தைக் கட்டும் அரசாங்கங்களும் ஒன்றல்ல” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இஸ்ரேலுக்கான வான்வெளியை மூடல்! அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்க முடிவு..அறிவித்த துருக்கி News Lankasri

அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்: வெளியான வீடியோ! News Lankasri
