இஸ்ரேலுக்கு எதிராக துருக்கியின் அதிரடி முடிவு..!
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்து இஸ்ரேலிய விமானங்களுக்கு அதன் வான்வெளியை மூடுவதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் தெரிவித்துள்ளார்.
துருக்கி, இஸ்ரேல் இடையே 1997ஆம் ஆண்டு முதல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இதில் எஃகு, எண்ணெய் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவை முக்கிய வர்த்தக பொருட்கள் அடங்கும்.
ஆனால், காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வரை, இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக கடந்த ஆண்டு மே மாதம் துருக்கி கூறியது.
இருதரப்பு வர்த்தகம்
இந்த நிலையில், இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி முற்றிலும் துண்டிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
துருக்கி, இஸ்ரேல் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2023இல் கிட்டத்தட்ட 6.8 பில்லியன் டொலர்களாக இருந்தது.
இதில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை துருக்கிய ஏற்றுமதிகள் ஆகும் என துருக்கிய புள்ளியியல் நிறுவன தமது தரவுகளில் கூறியது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
