அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர முயற்சித்த சட்டத்தரணிகள்: ரணில் வெளியிட்ட தகவல்
அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வழக்குகளை தொடர்வதற்கு சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் முயற்சித்த போதிலும் தாம் அதனை தடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மிகவும் சிறுபான்மையைக் கொண்ட பிரதமர் ஒருவரை நியமித்தமை மற்றும் தேர்தல் தினம் தொடர்பில் இவ்வாறு வழக்குத் தொடரப்படவிருந்ததாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை மறந்த ஜனாதிபதி
ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையான அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசாங்கம் அவர்களை மறந்துவிட்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
