ரணிலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள பசில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.
இதில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கும், பசில் ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெறும் முதலாவது பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சர்களின் ஆட்சியை அமைக்க பசில் பிரயத்தனம் - இழுத்தடிக்கும் ரணில் |
சர்வகட்சி அரசாங்கம்
சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முன்னெடுக்கும் செயற்பாடுகள், பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்தப் பேச்சுவாரத்தையின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை
வழங்குவது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் பசில் ராஜபக்ச முன்வைத்த
கோரிக்கை குறித்தும் இதன்போது பரிசீலனை செய்யப்படவுள்ளது எனவும்
அறியமுடிகிறது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
