இரண்டு மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாளைய தினம் இரண்டு மேதினக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் (01) பல்வேறு அரசியல் கட்சிகளும் மேதினப் பேரணிகள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
மே தினக் கூட்டம்
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் இரண்டு இடங்களில் நடைபெறும் இருவேறு கட்சிகளின் மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார்.
அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அழைப்பை ஏற்று நாளை காலை 10.50 மணியளவில் கொட்டகலையில் நடைபெறும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மே தினக் கூட்டத்தில் முதலாவதாக கலந்து கொள்ளவுள்ளார்.

இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர் நாளை (01) பிற்பகல் கொழும்பு, மாளிகாவத்தை மைதானத்தில் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்திலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam