ChatGPTயிடம் கேட்ட முக்கிய கேள்வி குறித்து பகிரங்கப்படுத்திய ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சமீபத்தில் ChatGPT உடன் மேற்கொண்ட ஒரு உரையாடல் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த உரையாடல் நிதி சந்தைகள் தொடர்பானது அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு அதிகமாக தாக்கம் செலுத்தும் சமுதாயங்களில் மதங்களை எவ்வாறு பாதுகாத்து முன்னேற்றலாம் என்பதே அதன் மையக் கேள்வி என்றும் அவர் விளக்கியுள்ளார்.
‘தம்மபதம்’ நூலின் தொடக்கச் செய்யுளை மேற்கோள் காட்டி, மனித மனமா அல்லது செயற்கை நுண்ணறிவா? எது உயர்ந்த நிலை பெற்றது என்ற கேள்வியை தான் ChatGPTயிடம் எழுப்பியதாக அவர் தெரிவித்தார்.
அறிவே முக்கியம்..
அந்தக் கேள்விக்கு பதிலளித்த ChatGPT, இறுதியில் மனித மனமே மேலானது என்பதை ஏற்றுக்கொண்டதாகவும், செயற்கை நுண்ணறிவு வரையறுக்கப்பட்ட திறன்களுடன் மட்டுமே செயல்படக்கூடியது என்பதையும் ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தை நோக்கி, புத்தமதத்தினர்புத்த தத்துவங்களை செயற்கை நுண்ணறிவுடன் இணைத்து, நீண்டகால நிலைத்தன்மையை எவ்வாறு உறுதி செய்யலாம் என்பதை தீவிரமாக ஆராய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், வருங்காலத்தை எதிர்கொள்ள செல்வம் அல்ல, அறிவே முக்கியத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri