ஐரோப்பிய ஒன்றிய பரிந்துரைகளை புறக்கணித்துள்ள அரசு:விடுக்கப்பட்டிருக்கும் சர்வதேச எச்சரிக்கை
ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணரால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை இலங்கையில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பூர்த்தி செய்யவில்லை என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சனம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.பி. பிளஸ் GSP+ இன் கீழ் வர்த்தக நடவடிக்கைகளில் பயனடைய ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை உறுதியளித்துள்ள மனித உரிமைகள் மற்றும் உறுதிமொழிகளுக்கும் இணங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய சட்டமூலத்தில் உள்ள சிக்கல்கள்
இந்தப் புதிய சட்டத்திலும் பழைய சட்டத்தைப் போன்றே மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் ஆபத்தான பிரிவுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த யோசனையில், பயங்கரவாதம் என்பதற்கான விளக்கம் மிகவும் விரிவாகவும், தெளிவாக இல்லாமலும் உள்ளது. இது அரசியல் செயல்பாடுகள் மற்றும் அமைதியான போராட்டங்களை முடக்குவதற்குப் பயன்படுத்தப்படலாம்.
அத்துடன், அரசுக்கு எதிரான செயற்பாடுகள் அல்லது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தல் போன்ற பொதுவான செயல்களும் பயங்கரவாதமாகக் கருதப்பட வாய்ப்புள்ளது.

ஒரு சந்தேகநபரை ஒரு வருடம் வரை நீதிமன்ற விசாரணையின்றித் தடுப்புக்காவலில் வைக்க இந்தப் புதிய சட்டம் அனுமதி அளிக்கிறது.
இதேவேளை, தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்கவும், புதிய சட்டத்தை உருவாக்கும்போது பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri