மைத்திரிக்கு எதிரான மனுவில் பிரதிவாதியாக ரணில்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு மஹாகமசேகர மாவத்தையில் வீடொன்றை வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எல்.டி.பி. தெஹிதெனிய, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்காக மனுதாரர்களுக்கு ஜூன் 29 வரை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
