ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் ரணில்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் புதிய அரசியல் அலுவலகத்தை கொழும்பில் (Colombo) நேற்று (06.06.2024) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விசேட அறிவித்தல்
ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையிலேயே அவரின் ஆலோசகரால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக கொழும்பில் புதிய அரசியல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 3 மணி நேரம் முன்
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam