மீண்டும் ஒரே மேடையில் ரணில் - மகிந்த : செய்திகளின் தொகுப்பு
"ரொனி டி மாலின் இறுதி விருப்பத்திற்கமைய, நானும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இறுதிச் சடங்கில் ஒன்றாக கலந்துகொண்டு உரையாற்றினோம்" என ஜனாதிபதி கூறியுள்ளார்.
ருஹுனு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் நேற்றைய தினம் (01.02.2024) பிற்பகல் இடம்பெற்ற ரொனி டி மாலின் இறுதிக்கிரியைகளி்ல் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
மேலும், சரியான தீர்மானங்களை எடுத்து அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்தி முடிவுகளைப் பெறுவது ரொனி டி மெல்லின் குணாதிசயத்தின் சிறப்பு எனவும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய அரசியல்வாதி எனவும் அவர், நாட்டுக்கு ஆற்றிய சேவையை மறக்க முடியாது எனவும் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை செய்திகளின் தொகுப்பு....

இந்திய - இலங்கை அரசாங்கங்களின் திட்டமிடலே சாந்தனின் இறுதிக்கிரியை இழுபறிக்கு காரணம்: போராளிகள் நலன்புரிச் சங்கம் குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |