அரசாங்கத்திற்கு ரணில் கூறும் அறிவுரை
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினருடன் கலந்துரையாடி உரிய தீர்வை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்ட காணொளியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் இளைஞர்களின் கோரிக்கைக்கமைய தேசிய இளைஞர் சேவை மன்றத்தை நான் நிறுவினேன். இதன் மூலம், இளைஞர்களின் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் அவர்களின் கலைத் திறனை ஊக்குவிப்பதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது.
மன்றத்தின் எதிர்காலம்
இந்த நடவடிக்கை வெற்றி பெற்றதையடுத்து, இளைஞர்கள் சமூகத்தில் பங்கெடுக்க ஆரம்பித்தனர். இளைஞர் சேவை மன்றத்தில் இருந்த இளைஞர்கள், பல்வேறு கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளாக சென்றனர்.
இவர்கள் அனைவரும் இளைஞர் சேவை மன்றத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல உறுதுணையாகவும் உள்ளனர். எனினும், அண்மையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்த சட்டங்கள் இளைஞர் சேவை மன்றத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடக்க இருப்பதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது. இவ்வாறு சென்றால், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் எதிர்காலம் கேள்விக்குட்படுத்தப்படும்.
அறிவுரை
இது அரசியல் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திருத்த சட்டம் என ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்சினையை நீண்ட தூரம் கொண்டு செல்லமால் உடனே தீர்வு காண்பது நல்லது.
இது தொடர்பில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினருடன் கலந்துரையாடி இரு பக்கத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் உரிய தீர்வை அரசாங்கம் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் : முகம் முழுவதும் காயங்கள்! உறவினர்களின் பகிரங்க வாக்குமூலம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 10 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
