பொருளாதார மீட்சி வேண்டுமானால் அதானியுடன் செயற்பட வேண்டும்: ரணிலின் அறிவுரை
இலங்கை பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை அனுபவிக்க வேண்டுமானால், அதானி குழுமம் மற்றும் பிற முதலீட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன எழுதிய "அர்த்திகேயே பஞ்சௌதயா" புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரமசிங்க, இலங்கை குறிப்பாக இந்திய முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் மற்றும் அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதானியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது தமது அரசாங்கம் பல்வேறு வகையான மின்சார கொள்முதல் விலைகளை அறிமுகப்படுத்தியது. கொள்முதல் விலை அமெரிக்க சென்ட் 2 முதல் 8 வரை இருந்தது.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
எனினும், தற்போதைய அரசாங்கம் இந்த வரம்பைத் தாண்டிச் சென்றுள்ளது என்று ரணில் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில், பொருளாதாரத்தின் வளர்ச்சியை அடைய விரும்பினால், இந்த முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வாங்குவதில் ஆர்வமாக இருப்பதால், இலங்கைக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. இந்த விடயத்தில், வெளிநாடுகளில் இருந்து எரிசக்தியைப் பெற்ற இந்தியா, சீனா போன்ற நாடுகளை இலங்கை பின்பற்ற வேண்டும்.
அதேநேரம், இந்த நாட்டில் மூலதனமும் தொழில்நுட்பமும் இல்லாததால், வெளியில் இருந்து எரிசக்தியைப் பெறுவதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
