ரணிலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Basil Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis
By Jenitha Jul 27, 2022 09:17 AM GMT
Report

பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்னவினால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உட்பட்ட ஐவர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் 

ரணிலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Ranil Acquitted From The Economic Crisis Case

இதன்போதே ​​முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் நிதியமைச்சரின் பயணத் தடையை ஆகஸ்ட் 02 ஆம் திகதி வரை நீடிக்குமாறு பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வழக்கில் இருந்து நீக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்பின்படி, ஜனாதிபதிக்கு எதிராக மனுவை தாக்கல் செய்யமுடியாது என்ற அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்தும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் காரணமாக முன்வைக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் கோரிக்கைக்கு பலதரப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் ரணில் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ நீதிமன்றில் ஆட்சேபனையை முன்வைத்து தனது கட்சிக்காரர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதால் அரசியலமைப்பின் 35ஆவது சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதியான அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனைகள் முன்வைக்கவுள்ளதாக நேற்றைய தினம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து இந்த ஆட்சேபனைகளை இன்று சமர்பிக்குமாறு உயர்நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் இந்த மனுவின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கத்தோலிக்க மதகுருமார்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட பல தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கிலிருந்து ரணிலின் பெயரை நீக்குமாறு கோரிக்கை 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US