சூடு பிடிக்கும் தேர்தல் களம்! அனுரவுக்கு பகிரங்க சவால் விட்டுள்ள ரணில்
பொருளாதாரம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி ஒருமித்த கருத்துக்கு வந்தால், அநுரகுமார திஸாநாயக்கவின் சவாலை விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளத் தயார் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால திட்டம் ஏற்றுமதி பொருளாதாரமா அல்லது இறக்குமதி பொருளாதாரமா என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விவாதத்திற்கு தயார்
அவ்வாறான அறிவித்தலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமையாளருடன் கலந்துரையாடலை ஆரம்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
“தன்னை நண்பன் என்று சொல்லக்கூடாது என்று சொன்னார். இப்போது ஆனமடுவையில் விவாதத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.
சஜித்திற்கும் அழைப்பு
நான் எப்படி விவாதத்திற்கு வருவது? நீங்கள் முதலில் ஏற்றுமதி பொருளாதாரமா? இறக்குமதி பொருளாதாரமா? என்பதை எங்களிடம் கூறுங்கள்.
அதன் பின்னர் நானும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமையாளரும் கலந்துரையாடுவோம். வேண்டும் என்றால் சஜித்தை வருமாறு கூறுவோம்.” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.