தேர்தலை நடத்தினால் ஜனாதிபதிக்கே வெற்றி:ரணில் யுக புருஷர்-நிமல் சிறிபால
சர்வஜன வாக்கெடுப்பு அல்லது தேர்தல் ஒன்றை நடத்தினால், ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள், சிறப்பான தலைமைத்துவதை நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எந்த தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்வார்கள் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரணில் சவாலை அச்சமின்றி ஏற்றுக்கொண்ட யுக புருஷர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவாலை எதிர்கொள்ள அச்சமின்றி முன்வந்த யுக புருஷர். அவர் தனது அரசியல் எதிர்காலம் பற்றியோ, வேறு விடயங்கள் குறித்தோ பேசாது சவாலை பொறுப்பேற்றார்.
தற்போது நாட்டின் பிரச்சினைகள் சிறிது சிறிதாக தீர்க்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடு செல்லும் திசை மிக தெளிவானது எனவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan