விழா மேடையில் “மக்கள் பிரதிநிதி” வீரர் ஒருவர் நடந்துக்கொண்ட விதம்
இந்தியாவின் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மக்கள் பிரதிநிதி ஒருவர் மல்யுத்த வீரர் ஒருவரை மேடையில் வைத்து அறைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன.
இதில், உத்தர பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
இந்தநிலையில் அவர் மேடையில் வைத்து வீரர் ஒருவரை அறைந்தமை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
15 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது
எனினும் 15வயதைக் கடந்த குறித்த வீரர், குறித்த மக்கள் பிரதிநிதியை தமக்கு தெரியும் என்று கூறி, போட்டி நிர்வாகிகளிடம் பங்கேற்க வாய்ப்பை கேட்டுள்ளார்.
இந்தவிடயம் தெரிய வந்தமையை அடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த வீரரை மேடையில் வைத்து அறைந்துள்ளார்.

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
