எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் விசேட அறிக்கை வெளியிடும் பிரசன்ன ரணதுங்க
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தனது எதிர்கால அரசியல் பயணம் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக தெரியவருகிறது.
அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் முடிவுகள்

சவாலை ஏற்றுக்கொண்ட தலைவருடன் முன்நோக்கி செல்வதா அல்லது கடந்த கால நிலைப்பாட்டில் இருந்து செயற்படுவதா என்பது தொடர்பாக அவரது தேர்தல் தொகுதியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் முடிவுகள் பிரசன்ன ரணதுங்கவிடம் இருக்கின்றது.
பிரான்ஸ் நாட்டுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று நாடு திரும்பவுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடர போகும் பிரசன்ன

இதன் பின்னர் அந்த விசேட அறிக்கையை வெளியிடுவார் என கூறப்படுகிறது.
பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.