நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள்: பொலிஸார் வெளியிட்ட காரணம்
கடுவெல - ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானமைக்கு இரண்டு பேருந்துகளையும் கவனக்குறைவாக செலுத்தியமையே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுவெல - ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேற்று (19.06.2024) நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 50 பேர் காயமடைந்திருந்தனர்.
கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற மாணவர் பேருந்தும் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

பேருந்துகளுக்கு பலத்த சேதம்
இந்த விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் நவகமுவ மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக நவகமுவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்து இடம்பெற்றபோது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் விசாரணை
மேலும், விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஹங்வெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் குமாரவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட் ஏக்கநாயக்க (54580) உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam