புதிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கொலையுடன் பணிகளை ஆரம்பித்துள்ளார் - நாடாளுமன்றில் சஜித்! (Video)
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கொலை சம்பவத்துடன் தமது பணிகளை ஆரம்பித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றில் இன்று அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்தநிலையில் ரம்புக்கனையில் கொல்லப்பட்ட சமிந்த லக்சானின் பிள்ளைகள் மற்றும் அவர்கள் எதிர்கால செயற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பேற்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டின் நிதிப் பிரச்சினை தொடர்பாக தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று நாட்டில் அரச பயங்கரவாதம் தலைதுாக்கியுள்ளது.
எனவே இந்த சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் இளைப்பாறிய நீதியரசர் ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.
சம்பவத்தின்போது குறைந்த பலப்பிரயோகம் பயன்படுத்தப்பட்டதாக அமைச்சர் கூறியபோதும் துப்பாக்கி சூட்டை நடத்தியமை குறைந்த பலப்பிரயோகமா என்று சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
இந்த சம்பவத்தின்போது துப்பாக்கி சூட்டை நடத்துவதற்கு உத்தரவிட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியையும், பாதுகாப்பு செயலாளரையும் இன்று பகல் 12 மணிக்கு முன்னர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து கட்சி தலைவர்களிடம் விளக்கம் கோருவதற்கான வாய்ப்பை வழங்குமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
ரம்புக்கன துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றில் விளக்கம் அளித்த பின்னரே சஜித் பிரேமதாச தமது கருத்துக்களை வெளியிட்டார்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
