காரைக்கால் கடற்றொழிலாளர்களை கைது செய்த ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்
இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களால் நாட்டுப்படகுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த காரைக்கால் கடற்றொழிலாளர்கள் 14 பேர் ஒரு விசைப்படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(16.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், காரைக்கால் கடற்றொழிலாளர்கள் நாட்டுப்படகு கடற்றொழிலாளர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் செயற்படுவதால் தமிழக கடற்றொழிலாளர்கள் பாதிப்படைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துமீறிய கடற்றொழில்
மற்றும் இலங்கை கடற்பரப்புக்குள் சென்று அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகளால் ஏனைய தமிழக கடற்றொழிலாளர்கள் பாதிப்படைவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது.

காரைக்கால் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன் சிறிய கடற்றொழிலார்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் கரைக்கு அண்ணளவாக வந்து அதிகளவான மீன்களை பிடித்துச் செல்வதையும் தடை செய்ய வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
மேலதிக நடவடிக்கை
இந்தநிலையில் கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடி கடற்பரப்புக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் விசைப்படகு மற்றும் அதில் இருந்த 14 கடற்றொழிலாளர்களை ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை கைது செய்து இன்று அதிகாலை இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.