இலங்கை அரசை குற்றம் சாட்டிய ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் (VIDEO)

Srilanka India Government Fisherman Rameswaram accuse
By Ashik Mar 24, 2022 01:55 PM GMT
Report

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர பல ஆயிரம் கோடி ரூபாவை நிதி உதவியாக இந்திய அரசிடம் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, அதற்கு கைமாறாக தமிழக கடற்தொழிலாளர்கள் 16 பேரை சிறைபிடித்துள்ளதாக ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து நாளை (25) முதல் ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் இன்று  (24) காலை இராமேஸ்வரத்தில் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்தொழில் துறை முகங்களில் இருந்து அரசு கடற்தொழில் அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை கடற்தொழிலுக்கு கடலுக்குள் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 கடற்தொழிலாளர்களையும், மண்டபத்தைச் சேர்ந்த 4 கடற்தொழிலாளர்கள் என மொத்தமாக 16 கடற்தொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இலங்கை அரசை குற்றம் சாட்டிய ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் (VIDEO) | Rameswaram Fishermen Accuse Sri Lankan Government

கடற்தொழிலாளர்கள் மீதான இந்த கைது நடவடிக்கையை கண்டித்து இன்று (24) காலை ராமேஸ்வரம் கடற்தொழில் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு கடற்தொழில் சங்க கடற்தொழிலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை நாட்டை மீட்பதற்காக இந்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.

இலங்கை அரசை குற்றம் சாட்டிய ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் (VIDEO) | Rameswaram Fishermen Accuse Sri Lankan Government

நிதி உதவியை பெற்றுக் கொண்ட இலங்கை அரசு அதற்கு கைமாறாக ஒரே இரவில் 16 கடற்தொழிலாளர்களை சிறை பிடித்துள்ளது. இதற்கு ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதுடன், தமிழக கடற்தொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து நாளை (25) முதல் ராமேஸ்வரம் விசைப்படகு கடற்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முடிவு செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் சனிக்கிழமை (26) காலை ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே கடற்தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.

இலங்கை அரசை குற்றம் சாட்டிய ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் (VIDEO) | Rameswaram Fishermen Accuse Sri Lankan Government

மேலும் கடற்தொழிலை மட்டுமே நம்பி வாழக் கூடிய சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். 

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US