நாட்டை உலுக்கிய பேருந்து விபத்து.. நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த நபர் தொடர்பான சம்பவத்தைப் முறைப்படி விசாரணை செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மிஹிந்தலை பொலிஸாருக்கு அனுராதபுரம் மேலதிக நீதிவான் டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸார் தாக்கல் செய்த 'B - அறிக்கை'யை பரிசீலித்த நீதிவான், விபத்து நடந்த இடம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேருந்துகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
B - அறிக்கை
அத்துடன், விபத்துக்குள்ளான மூன்று பேருந்துகளையும் வாகன பரிசோதகர் (Motor Vehicle Examiner) மூலம் தனித்தனியாக ஆய்வு செய்து அதன் அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மேலும், அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற நீதிவான், உயிரிழந்தவரின் உடலை நேரில் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனை நடத்தி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரியிடம் உத்தரவிட்டார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் சானக அபேசிரிகுணவர்தனவின் ஆலோசனையின் கீழ் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.