முஸ்லிம்களின் கதையே இராமாயணம்: மௌலவியின் கருத்தால் புதிய சர்ச்சை(Video)
இராமாயண கதை என்பது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினையில் தோன்றி இருக்கலாம் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நாடாளுமன்றத்தில் அண்மையில் இராமாயணம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றமை தொடர்பில் இன்று(15.06.2023) விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம்.
முஸ்லீம்களுடைய பெயர்கள்
இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம். ஆனால் இராவணன் தமிழர் என்பதற்கும் சிங்களவர் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி வருகின்றேன்.
இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது.
இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம்.
இராமாயணத்தில் வருகின்ற கதாபாத்திரங்கள் இராவணன், இராமன், சீதை, இலக்குவனன், வாலி, சுக்கீரிவன் போன்ற பெயர்களை பார்க்கின்ற போது அது அரபு மொழிக்கு மிகவும் நெருக்கமான இருக்கின்ற முஸ்லீம்களுடைய பெயர்களை போன்று இருக்கின்ற காரணம் என்ன என்று ஆராய வேண்டும்."என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |