அர்ச்சுனாவுக்கு சபையில் கடுமையான எச்சரிக்கை விடுத்த பிரதி சபாநாயகர்
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிரதி சபாநாயகர் ஹேமாலி வீரசேகர கடுமையாக எச்சரித்தார்.
சபை நடவடிக்கைககளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய தண்டனை வழங்க நேரிடும் என அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது, அர்ச்சுனா இராமநாதன் அடிக்கடி ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்பட்ட நிலையிலேயே சபைக்கு தலைமைதாங்கிய குழுக்களின் பிரதி சபாநாயகர், அவரை இவ்வாறு எச்சரித்தார்.
தண்டனை வழங்க நேரிடும்..
விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அடிக்கடி எழுந்து ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் நிலையியல் கட்டளை இலக்கங்களை குறிப்பிட்டு அர்ச்சுனா இராமநாதன் ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் விவாதத்தில் உரையாற்றும் போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருடன் தர்க்கங்களில் ஈடுபட்டனர்.
இதன்போதும் அர்ச்சுனா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய போது, அவரை எச்சரித்த பிரதி சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறான வகையில் நடந்து கொண்டால் நிலையியல் கட்டளை77, 78 மற்றும் 79 இன் கீழ் தண்டனை வழங்க நேரிடும் என்று தெரிவித்தார்.
நிலக்கரி மோசடியில் சிக்கிக் கொண்ட பிரிலோயர்ஸ் அமைப்பின் மைத்திரி குணரத்ன! திறைசேரி நிதி மோசடியை கடுமையாக விமர்சித்தவர்
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri