கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்! கைபேசியில் உள்ள இரகசிய தரவுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவு, ஆப்பிள் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத்திணைக்களம் இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.
நீதவான் விசாரணை
இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (09) மீண்டும் தொடங்கப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த உண்மைகளை கூடுதல் அறிக்கையுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

சம்பந்தப்பட்ட கைபேசியின் தரவுகள் தொடர்பாக முந்தைய நாள் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவு, ஆகஸ்ட் 18 அன்று அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இச்சம்பவத்தில் காலஞ்சென்ற சந்தேகநபரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பிரேத பரிசோதனை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை
அதன்படி, அந்த அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு பிரேதப் பரிசோதகருக்கும் அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கும் நீதிமன்றம் ஒரு நினைவூட்டலை வழங்கியுள்ளது.
இந்த வழக்கை அக்டோபர் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்
you may like this video