ரமழான் நோன்பு ஆரம்பம்: சவூதி தூதுவர் வாழ்த்து
ரமழான் மாத நோன்பு காலம் ஆரம்பமாகியுள்ளதையிட்டு இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ் தானி விஷேட வாழ்த்து செய்தியொன்றை விடுத்துள்ளார்.
அச்செய்தியில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
'கருணையும், நற்செயல்களும் நிறைந்த, தவறுகள் மன்னிக்கப்படும், புனித மிகு அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மிகப்பெரும் மகிழ்ச்சிகரநிகழ்வை நினைவுபடுத்தும் அருள்மிகு புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு, அப்புனித மிகு மாதத்தை அடைந்து கொண்டுள்ள இலங்கையரான உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும் அருளும் நிறைந்ததாக அமைய வேண்டும்
நான் இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசில் அடைந்து கொண்ட முதல் புனிதமிகு ரமழான் மாதம் இதுவாகும்.
இப்புனிதமிகு
மாதம் அனைவருக்கும்
கருணையும் சுபீட்சமும்
அருளும் நிறைந்ததாக
அமையப்பெற்று, இப்புனிதமிகு மாதத்தினை அனைவரும் அடைந்து, நோன்பு நோற்று நற்கிரியைகளில்
ஈடுபடும் பாக்கியத்தை
அடையவும், அனைவரது
நற்செயல்களையும் வல்ல இறைவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
