வடக்கு கிழக்கில் மாபெரும் பேரணி நடத்த ஏற்பாடு: அனைவருக்கும் அழைப்பு
இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு சுதந்திரமில்லாத நாளாக பிரகடனப்படுத்தி அன்றைய தினம் வடக்கிலும் கிழக்கிலும் மாபெரும் எதிர்ப்பு பேரணியை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தினத்திற்கான ஏற்பாடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நான்காம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் சிறப்பான முறையில் சுதந்திர தினத்தினை கொண்டாடுவதற்கு பாரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் நாங்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் எப்போதுமே ஒரு சுதந்திரம் இல்லாதவர்களாக தான் வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.
எதிர்வரும் நான்காம் திகதி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும், வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் இணைந்து வடக்கிலும் கிழக்கிலும் பாரிய ஒரு எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்துள்ளோம்.
அமைதியான முறையில் பேரணி
இந்தப் பேரணி தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லாத ஒரு கருப்பு தினமாக சுதந்திர தினத்தை பிரகடனப்படுத்தி அமைதியான முறையில் செய்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
அந்த வகையில் அனைத்து தமிழ் தேசியம் சார்ந்த தமிழ் மக்களாக நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்த சுதந்திர நாளை சிங்கள அரசியல் தலைமைகள் கொண்டாடி வரும் அந்த சுதந்திரநாளை கரி நாளாக பிரகடனப்படுத்தி பாரிய ஒரு அமைதியான எதிர்ப்பு பேரணியாக நாங்கள் உலகத்திற்கு அறியப்பட்ட வேண்டிய ஒரு தருணம் எதிர்வரும் நான்காம் திகதி ஆகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
