முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அடைந்தது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி
தமிழினத்திற்கு நீதி கோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்றடைந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சிங்கள பிரதேசமான வெலிஓய பிரதேசம் ஊடாக நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு, அங்கிருந்து சிறு கவனயீர்ப்பு ஒன்றை முன்னெடுத்து தொடர்ந்து உடுப்புக்குளம் பகுதியில் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களுடன் கைகோர்த்த பேரணி தொடர்ந்து முல்லைத்தீவு நகரை வந்தடைந்தது.
அங்கு இராயப்பர் தேவாலய முன்றலில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து வட்டுவாகல் பாலம் ஊடாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை பேரணி வந்தடைந்துள்ளது.
முதலாம் இணைப்பு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான, தமிழினத்திற்கு நீதி கோரிய பேரணி தற்போது முல்லைத்தீவு நகரை அண்மித்துள்ளது.
இன்று காலை, திருகோணமலையில் இருந்து ஆரம்பமான குறித்த பேரணி பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தற்போது முல்லைத்தீவை அடைந்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி அம்பாறை பொத்துவிலில் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு வழியாக திருகோணமலையை வந்தடைந்து தற்போது முல்லைத்தீவை அடைந்துள்ளது.
வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம்,மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் உள்ளிட்ட அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றைக் கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கேட்டும் இந்த போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.








தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
