காலிமுகத்திடலில் இருந்து படையெடுத்த கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களால் பொலிஸ் நிலையம் முற்றுகை (Video)
கொழும்பு, மருதானை பொலிஸ் நிலைய வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடல் பாடி ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
காலிமுகத்திடல் பகுதியிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணியாக சென்றவர்களே இவ்வாறு மருதானை பொலிஸ் நிலைய வாயிலை முற்றுகையிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம ஆர்ப்பாட்டத்தின் முன்னோடியாக செயற்பட்டு வரும் 9 பேரை கைது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
காலிமுகத்திடல் பகுதியிலிருந்து இலங்கை பொலிஸ் தலைமையகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணி இன்று காலை காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோகோட்டாகமவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
கோகோட்டாகம ஆர்ப்பாட்டக்காரரர்கள் ஒன்பது பேரை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
கைது நடவடிக்கைக்கான காரணம்
இதனையடுத்து அந்த ஒன்பது பேர் உட்பட கோகோட்டாகம போராட்டக்காரர்கள் அனைவரும் இணைந்து, குறித்த கைது நடவடிக்கைக்கான காரணம் என்னவென கோருவதற்காக இலங்கை பொலிஸ் தலைமையகத்தை அடையவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


