அரசை எதிர்த்து கண்டி முதல் கொழும்பு வரை இடம்பெறப்போகும் மாபெரும் பேரணி
ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் இருந்து கொழும்பு வரை 'சமகி ஜன பாகமன' என்ற பெயரில் எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் கண்டியில் இருந்து ஆரம்பமாகி 30ஆம் திகதி கொழும்பை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, இந்த எதிர்ப்புப் பேரணியானது பின்வரும் 5 கட்டங்களைக் கொண்டதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
* முதலாம் கட்டம் – ஏப்ரல் 26 – கண்டி முதல் மாவனெல்லை வரை
* இரண்டாம் கட்டம் – ஏப்ரல் 27 – மாவனெல்லை முதல் கலிகமுவ வரை
* மூன்றாம் கட்டம் – ஏப்ரல் 28 - கலிகமுவ முதல் தனோவிட்ட வரை
* நான்காம் கட்டம் – ஏப்ரல் 29 - தனோவிட்ட முதல் யக்கல வரை
* ஐந்தாம் கட்டம் – ஏப்ரல் 30 - யக்கல முதல் பேலியகொடை வரை
மே முதலாம் திகதி கொழும்பில் மாபெரும் மே தினப் பேரணியுடன் ஐக்கிய மக்கள்
சக்தியின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று ஹரின் பெர்னாண்டோ எம்.பி. மேலும்
கூறியுள்ளார்.