ரகித ராஜபக்சவுக்காக 150 சட்டத்தரணிகள்! மகனுக்காக தந்தையின் இரகசிய நகர்வு
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனது மகன் தொடர்பில் கடந்த நாட்களில் எதுவும் பேசாமல் இருந்தார் . ஆனால், இந்தச் சம்பவங்கள் அனைத்தும் முடிந்து ரகித விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அங்கு நிலவிய பரபரப்பான சூழல் ஓரளவு தணிந்த பின்னர், அவருக்கு மிக நெருக்கமான நண்பர்கள் சிலர் கடந்த வார இறுதியில் சந்தித்துள்ளனர்.
அதன்போது தனது மகன் மற்றும் சரித்திற்கு நடந்தவை குறித்தும் முதன்முறையாக பேசியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் உலாவகின்றன.
தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை: ரகித ராஜபக்ச-தஹம் சிறிசேனவின் தொடர்பு! திடுக்கிடும் தகவல்கள் கசிவு
150 பேரைக் கொண்ட சட்டத்தரணிகள் குழு
ஒரு தந்தையாக என்னால் நீதிமன்றத்தில் அவனுக்காக முன்னிலையாக முடியாது. ஆனால் 150 பேரைக் கொண்ட சட்டத்தரணிகள் குழுவொன்று ரகித மற்றும் சரித் ஆகியோருக்காக முன்னிலையாகத் தயாராக உள்ளது. நான் இல்லாவிட்டாலும் எனக்குத் தெரிந்த திறமையானவர்கள் முன்னிலையாகத் தயாராக இருக்கிறார்கள்.
எனவே, எதிர்கால நீதிமன்ற விசாரணைகளின் போது உங்களுக்கும் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்று" என விஜயதாச ராஜபக்ச அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்ட சில விடயங்கள் நான் அரசாங்கத்துடன் இணையப் போவதாகவும், நீதித்துறை தொடர்பான ஏதோவொரு பதவி வழங்கப்படவுள்ளதாகவும் கடந்த காலத்தில் ஒரு பேச்சு அடிபட்டது. அவை அனைத்தும் பொய்க் கதைகளாகும்.
அரசாங்கத் தரப்பில் அவ்வாறான எண்ணம் இருந்ததா என்று தெரியவில்லை.ஆனால் எனது மனதில் அப்படி எந்த எண்ணமும் இருக்கவில்லை.

எனவே, என்னை அரசாங்கத்திற்குள் இழுக்க முயன்று அது தோல்வியடைந்ததால் தான் எனது மகனை இவ்வாறானதொரு சம்பவத்தில் சிக்க வைத்துள்ளதாக சிலர் கூறினர்.ஆனால் நான் அவற்றை நம்பவில்லை.
எனக்குத் தெரிந்த வகையில், சமூகத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காக, யாரையாவது ஊழல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி வெளியில் கொண்டுவந்தால் ஒரு பரபரப்பு ஏற்படுமல்லவா,
அதன் மூலம் அந்தப் பிரச்சினைகளை மூடிமறைக்கலாம் என்பதற்காக இது செய்யப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன் என்று விஜயதாச ராஜபக்ச தனது பேச்சின் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan