ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையாகிய இலங்கையர்கள் கட்டுநாயக்காவில் கைது செய்யப்படுவார்களா...!(Video)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகிய இலங்கையர்களுக்கு தற்காலிக அடையாள சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகிய இலங்கையர்கள் வேறு நாடுகளுக்கு சென்று வருவதற்கான அடையாள சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கையை இலங்கை தூதரகம் செய்கின்றது.
இந்த அடையாள சான்றிதழ் ஆறு மாதத்திற்கு செல்லுபடியாகும்.
குறித்த இலங்கையர்கள்,இலங்கையர்கள் தானா என்பதை அந்தந்த மாவட்ட கச்சேரி ஊடாக உறுதிபடுத்திய பின்னரே வழங்கப்படும்.
கடந்த மூன்று தினங்களாக இலங்கை பொலிஸ் தரப்பும்,இந்திய உள்துறையும் இனைந்து இந்த பணிகளை செய்து வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 3 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
