ராஜீவ் கொலை வழக்கு: விடுதலையான சாந்தனின் இலங்கை கடவுச்சீட்டு தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனின் கடவுச்சீட்டு மீண்டும் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி தங்கமாரியப்பன் முன்பு இன்று சாந்தனின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனிடம் இருந்து சிபிஐ அதிகாரிகள் கடவுச்சீட்டை பறிமுதல் செய்திருந்தனர்.
இந்த கடவுச்சீட்டு சென்னை அமர்வு கோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது.
சமீபத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. இந்த நிலையில் விடுதலையான சாந்தன் தனது கடவுச்சீட்டை 1995ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டதால், அதை புதுப்பிப்பதற்காக திருப்பி தரவேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றில் ஏற்கெனவே அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சாந்தனின் இலங்கை கடவுச்சீட்டு
இதற்காக திருச்சி முகாமில் இருந்த சாந்தன் இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அப்போது சாந்தனின் பெயர் உள்ளிட்டவற்றை சரிபார்த்த பின்னர் கடவுச்சீட்டை திருப்பி கொடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நீதிமன்றுக்கு கடவுச்சீட்டு தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து சாந்தனிடம் கடவுச்சீட்டு ஒப்படைக்கப்பட்டது.