ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் தாயார் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு(Video)
30 வருடங்கள் கோவில் குளம் என திரிந்து முன்வைத்த வேண்டுதல்களுக்கு இன்று பலன் கிடைத்துள்ளது என்றும் தனது மகன் விடுதலையாவதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி என்றும் சாந்தனின் தாயார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரிசின் பரிந்துரையின் பேரில் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயனபடுத்தி நளினி உள்ளிட்ட அறுவரை இன்று விடுதலை செய்தது.
இந்த கொலைவழக்கில் குற்றவாளியாக 30 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்த சாந்தனின் தாயார் அவர் விடுதலையானது தொடர்பில் எமது செய்தி பிரிவிற்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“பேரறிவாளனை விடுதலை செய்ததில் இருந்து எனக்கு பெரும் மன வருத்தமாக இருந்தது. எனது பிள்ளையை எப்போது விடுதலை செய்வார்கள் என்று இப்போது தான் அது நிறைவேறியது.
எனது உடல்நிலை சரியில்லை இல்லையென்றால் நான் சென்று எனது பிள்ளையை அழைத்து வருவேன்.
எனது ஆசை எல்லாம் எனது பிள்ளை நல்லபடியாக என்னிடம் வந்து சேர வேண்டும். அவருடன் நான் சிறிது காலம் வாழ வேண்டும் அதற்காக தான் நான் உயிருடன் இருக்கிறேன்.”என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ள முழு பதிவை இந்த காணொளியில் பார்க்கலாம்.
காணொளி-தீபன்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
