சாந்தனின் மரணத்தை அறியாமல் காத்திருக்கும் தாய்
சாந்தனின் மரண செய்தி கடுமையான சுகயீனத்தில் உள்ள அவரது அன்னைக்கு இன்று மாலை வரை அறிவிக்கப்படவில்லை என தெரியவருகின்றது.
இன்று மாலை செய்தியாளர்கள் சாந்தனின் பூர்வீக இல்லம் அமைந்துள்ள உடுப்பிட்டிப் பகுதிக்குச் சென்ற போது தனது புதல்வரான சாந்தன் வீடு திரும்பவுள்ள மகிழ்ச்சியில் தாயார் இருந்ததாக உடுப்பிட்டி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பூதவுடல் கொண்டுவரப்படவுள்ளது
தகவல் அறிந்து பலரும் செல்வார்கள் என்பதால் தாயார் தற்போது வேறு வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது மகன் வருவார் என ஏக்கத்திலேயே சாந்தனின் தாயார் இருந்தார் எனவும் உடுப்பிட்டி பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு ராஜீவ்காந்தி வைத்தியசாலையில் உயிரிழந்த சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவரது பூதவுடல் விரைவில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri