சாந்தனுக்காக உணவோடு காத்திருக்கும் தாய் - உயிரற்ற உடலாக திரும்பும் கொடுந்துயரம்
30 ஆண்டுகளின் பின்னர் மகன் வருவார் என உணவோடு காத்திருந்த தாய்க்கு உயிரற்ற உடலாக வரும் மகனைக் காண்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத சோகம் என தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரது விடுதலை என்பது ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்கு மாற்றுவதாக அமைந்து விட்டதாகவும் இது இந்திய அரசின் ஆதிக்கப்போக்கினையே வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாந்தனின் மரணம் தொடர்பில் ஐபிசி ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே தோழர் தியாகு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில் சாந்தனின் மரணம் தொடர்பில் தோழர் தியாகு தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வருகிறது இந்த நேர்காணல்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam