தனிப்பட்ட ரீதியில் அரசுடன் இணையப்போவதில்லை: ராஜித உறுதி!
தனிப்பட்ட ரீதியில் அரசுடன் இணையும் எண்ணம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (13.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கால எல்லையின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதுடன், இந்த விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்க வேண்டும்.
ஒழுக்காற்று விசாரணை
ஒரே அரசியல் கோட்பாடுகளைக் கொண்ட இரண்டு குழுக்களை, நடைமுறையில் உள்ள சில முரண்பாடுகளைக் காட்டி, பிளவுபடுத்துவது, நாட்டுக்கும், இரு கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இழைக்கும் அநீதி என்பதே எனது கருத்து.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுக்காற்று விசாரணைக் குழுவுக்குத் தான்
அழைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானது. மேலும், தனிப்பட்ட ரீதியில் அரசுடன் இணையும் எண்ணம் எனக்கு இல்லை எனவும் ராஜித தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 18 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
