நாட்டின் சாபம் இவர்களே..! மாகாண சபை தேர்தல் தொடர்பில் ராஜித சேனாரத்ன விமர்சனம்

Election Commission of Sri Lanka Dr Rajitha Senaratne Sri Lanka Politician Sri Lankan Peoples NPP Government
By Aanadhi May 29, 2026 07:17 AM GMT
Report

மாகாணசபை முறைமைக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரத்தை முன்னெடுத்து முழு நாட்டுக்கும் தீ வைத்த மக்கள் விடுதலை முன்னணியினர் தான் நாட்டின் உண்மையான சாபக்கேடு என ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் பண்டிகை நாளில் நடந்த சம்பவம் - சோதனை சிக்கிய இளைஞர்..!

கிளிநொச்சியில் பண்டிகை நாளில் நடந்த சம்பவம் - சோதனை சிக்கிய இளைஞர்..!

மாகாண சபை தேர்தலின் முக்கியத்துவம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 தான் கடந்த 75 ஆண்டுகாலத்தின் சாபம் என்று குறிப்பிடுகின்றனர்.

வரலாற்றை ஆராய்ந்து யார் நாட்டுக்கு சாபமாக செயற்பட்டது என்பதை இளம் தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள வேண்டும். பாரிய போராட்டத்துக்கு மத்தியில் தான் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது.

நாட்டின் சாபம் இவர்களே..! மாகாண சபை தேர்தல் தொடர்பில் ராஜித சேனாரத்ன விமர்சனம் | Rajitha Criticism Provincial Council Elections

காலவோட்டத்தில் பல விடயங்கள் மறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜென் Z தலைமுறையினருக்கு மாகாணசபை முறைமை பற்றி தெரியாது. மாகாணசபை முறைமை உரிமைக்காக போராடிய பலர் பாதிக்கப்பட்டார்கள்.

அவர்களின் சிலர் இன்றும் உயிருடன் உள்ளார்கள். ஆகவே மாகாணசபை முறைமை என்பது இலங்கை வரலாற்றில் பாரியதொரு திருப்புமுனையாகும். அதிகார பகிர்வுக்கான ஆரம்பக்கால நடவடிக்கைகள் முழு நாட்டுக்கும் தீ வைத்தது. ஆரம்பகால அதிகார பகிர்வுக்கு வடக்கின் பயங்கரவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

தெற்கின் பயங்கரவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். வடக்கின் பிரதிநிதிகள் சமஷ்டிக்கு அப்பாற்பட்ட வகையில் அதிகார பகிர்வை கோரினார்கள்.

இன கலவரத்தை தூண்டிய மக்கள் விடுதலை முன்னணி

இன கலவரத்தை தொடர்ந்து, கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போதைய காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு அதிகார பகிர்வுக்கு இணக்கம் தெரிவித்து, அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போது தேசிய மக்கள் சக்தி முழு நாட்டுக்கும் தீ வைத்தது. மக்கள் விடுதலை முன்னணி மாகாணசபை முறைமைக்கு எதிராக கடும் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

நாட்டின் சாபம் இவர்களே..! மாகாண சபை தேர்தல் தொடர்பில் ராஜித சேனாரத்ன விமர்சனம் | Rajitha Criticism Provincial Council Elections

ஒரு மாகாணத்தில் இருந்து பிறிதொரு மாகாணத்துக்குச் செல்ல வேண்டுமாயின் விசா எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

மாகாணசபை முறைமைக்கு எதிராக போராட்டத்தை நடத்தி மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் 6682 பேர் வரையில் படுகொலை செய்தார்கள்.

அதில், 1000 இற்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும், 485 அரச உத்தியோகத்தர்களும், 357 பொலிஸாரும், 15 இராணுவ அதிகாரிகளும், 202 இராணுவ வீரர்களும், 187 பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களும், 52 அதிபர்களும், 42 பிக்குகளும் உட்பட சிவில் மக்களும், ஊடகவியலாளர்களும், கலைஞர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

தலதா மாளிகைக்கு நடத்தப்பட்ட முதல் தாக்குதல்

விடுதலைப் புலிகள் அமைப்பு தலதா மாளிகைக்கு முதலாவதாக தாக்குதல் நடத்தவில்லை. மக்கள் விடுதலை முன்னணி தான் 1989 ஆம் ஆண்டு தலதா மாளிகைக்கு முதலில் தாக்குதல் நடத்தியது.

தீ வைத்த அரச பேருந்துகளின் பெறுமதி 288 மில்லியன் ரூபாவாகவும், தனியார் பேரூந்துகளினதும், புகையிரதங்களினதும் நட்டம் பல மில்லியன் ரூபாவாகும்.

நாட்டின் சாபம் இவர்களே..! மாகாண சபை தேர்தல் தொடர்பில் ராஜித சேனாரத்ன விமர்சனம் | Rajitha Criticism Provincial Council Elections

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மேனன் எழுதிய நூலில் இலங்கையில் வடக்கு மற்றும் தெற்கில் இடம்பெற்ற மோதல்களினால் நாடு என்ற ரீதியில் இலங்கை 200 பில்லியன் டொலர்களை இழந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

முழு நாட்டுக்கும் தீ வைத்த மக்கள் விடுதலை முன்னணி தற்போது கடந்த 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று குறிப்பிடுகிறது. வரலாற்றை ஆராய்ந்து யார் நாட்டுக்கு சாபமாக செயற்பட்டது என்பதை இளம் தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் கட்சியை தான் மாற்றினோம். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினர் தமது கொள்கையையே மாற்றியுள்ளார்கள். மாகாணசபைத் தேர்தல் முறைக்கு எதிராக செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் பிற்போடுகிறது என்றார்.   

மின்சாரம் எரிபொருள் மானியங்கள் விரைவில் நீக்கப்படும்..

மின்சாரம் எரிபொருள் மானியங்கள் விரைவில் நீக்கப்படும்..

அதீத மதுபோதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதியால் சர்ச்சை

அதீத மதுபோதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதியால் சர்ச்சை



மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US