மகிந்த ராஜபக்சவைப் போன்ற அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இன்னும் உருவாகவில்லை: தயாசிறி ஜெயசேகர
அரசாங்கக் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் இருந்தாலும் அதனை தீா்த்துக்கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளா் தயாசிறி ஜெயசேகர தொிவித்துள்ளாா்.
அரசாங்கக் கட்சிகளுக்கு இடையில் பிரச்சனை இருப்பது அனைவருக்கும் தொியும். எனினும் அதனை தீா்த்துக்கொள்வதற்கான முயற்சிகள் அவசியம் என்று கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தயாசிறி குறிப்பிட்டாா்.
கூட்டணிகளுக்கு தலைமைத் தாங்கும் கட்சிகள் ஏனையக் கட்சிகளை அரவணைத்துச் செல்லவேண்டும் என்று பிரதமா் மஹிந்த ராஜபக்ச நேற்று தொிவித்துள்ளாா்
இது ஒரு சிறந்த சாணக்கியமாக கருதப்படவேண்டும். அரசியலில் கூட்டணி என்பது எவ்வளவு அவசியம் என்பதை அனைவரும் உணரவேண்டும் என்றும் தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டாா்.
பிரச்சினைகளை தீா்க்கும் விடயத்தில் அனுபவம் என்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்சவைப் போன்ற அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இன்னும் உருவாகவில்லை என்றும் தயாசிறி தொிவித்துள்ளாா்.