அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் மகிந்த தரப்பினர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் நேற்று முன்தினம் இரவு கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் பொஹொட்டுவ முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மே தினக் கொண்டாட்டத்தின் பிரசார நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரு.சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை அடிப்படையாக கொண்டு அலுவலகங்கள் திறப்பு, மே அணிவகுப்பு ஏற்பாடுகள், தொகுதி மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டத் தொடர் குறித்து நீண்ட விவாதம் நடந்துள்ளது.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்திற்கு ஜனாதிபதி எவ்வாறு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மே தினத்தை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து மாவட்ட மற்றும் தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் எனவும், தீர்மானம் எடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த மற்றும் காமினி லொக்குகே தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 9 நிமிடங்கள் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
Red Card வாங்கி பிக்பாஸில் இருந்து வெளியேறிய கம்ருதீன், பார்வதி வாங்கிய சம்பளம்... யார் அதிகம் பாருங்க Cineulagam
புத்தாண்டு ராசிபலன்.., நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனத்திற்கு எப்படி இருக்கும்? News Lankasri
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam