ராஜபக்சவினர் நாணயங்களை அச்சிடுகின்றனர்: தகவல் அறிந்த இளைஞன் கொலை செய்யப்பட்டார்: பரப்பரப்பு தகவலை வெளியிட்டுள்ள மருத்துவர்

Rajapaksa PoliticalCrisisLK EconomicCrisisLK PeoplesProtestLK RanilJayasena SaveSrilankaLK
By Steephen Apr 08, 2022 06:35 AM GMT
Report

ராஜபக்சவினர் அத்துருகிரிய பிரதேசத்தில் ஓரிடத்தில் இரகசியமாக 5 ஆயிரம் ரூபாய் நாணய தாள்களை அச்சிட்டு வருவதாக சிறப்பு மருத்துவ நிபுணர் ரணில் ஜயசேன தெரிவித்துள்ளார். சிங்கள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது பற்றிய தகவலை வெளியிட்ட இளைஞன் ஒருவரை கொலை செய்து தியவன்னா ஆற்றில் மூழ்கடிக்க செய்துள்ளனர். இந்த பணத்தையே தேர்தல்களுக்கு செலவு செய்கின்றனர்.

இந்த பணம் போலியானது என்பதை வங்கிகளால் கூட கண்டுப்பிடிக்க முடியாது. என்னிடம் ஒரு நோயாளி வந்தார், தனக்கு மரணம் பயம் இருப்பதாக கூறினார். காணாமல் போன அவரது நண்பன் தியவன்னா ஓயவில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதற்கான காரணத்தை அந்த நோயாளி கூறினார். அத்துருகியவில் காமனி செனரத்திற்கு சொந்தமான இடம் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நிதியமைச்சர் என்ற வகையில் அவரது கையெழுத்துடன் கூடிய 5 ஆயிரம் ரூபாய் நாணய தாள்கள் அச்சிடப்பட்டு இரவு 12 மணிக்கும் முன் வெளியில் கொண்டு செல்லப்படுவதை நோயாளியின் நண்பன், பார்த்து அதனை வெளியில் கூறியுள்ளார்.

குறித்த இடத்தில் காமினி செனரத்தின் மைத்துனரது அச்சகம் உள்ளதை நான் பின்னர் அறிந்துக்கொண்டேன். இந்த விடயம் தொடர்பாக நேரில் பார்த்த என்னிடம் வந்த நோயாளியின் நண்பன் அவர்களின் அறைக்கு திரும்பவில்லையாம், வீட்டிற்கும் செல்லவில்லையாம், அலைபேசியில் தொடர்புக்கொண்டால், அதனையும் நண்பன் எடுக்கவில்லையாம்.

இதன் பின்னர் தியவன்னா ஓயாவில் சடலம் கிடைத்துள்ளதுடன் என்னிடம் வந்த நோயாளி சென்று சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார். இதனால், தன்னையும் கொன்று விடுவார்கள் என்ற அச்சம் இவருக்கும் ஏற்பட்டுள்ளது.

என்னிடம் இந்த தகவலை வழங்கிய நோயாளியை தலைமறைவாக இருக்குமாறும் வயிற்றில் ஏற்பட்டுள்ள புண்ணுக்கு மருந்து கட்டாயம் எடுக்க வேண்டும் என்பதால், அடுத்த வாரம் வாருங்கள் எனக் கூறி நோயாளியை அனுப்பி வைத்தேன்.

அவர் தற்போது வரை திரும்பி வரவில்லை. காமினி செனரத்திற்கு சொந்தமான இடத்தில் 5 ஆயிரம் ரூபாய் பணம் அச்சிடப்படுவதை வெளியில் கூறியதன் காரணமாகவே இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த பணம் அச்சிடும் விடயம் தொடர்பாக 2014 ஆம் ஆண்டு பொலிஸ் மா அதிபராக இருந்த இலங்ககோனிடம் முறைப்பாடு செய்தேன். இது பற்றி தேடி அறிவதாக பொலிஸ் மா அதிபர் கூறினார்.

இரண்டு வாரங்களின் பின்னர் நான் பொலிஸ் மா அதிபரை தொடர்புக்கொண்டேன். தமக்கு கூட அந்த இடத்திற்கு செல்ல அனுமதியில்லை என பொலிஸ் மா அதிபர் என்னிடம் தெரிவித்தார்.

இவை பற்றி பேசி பிரயோசனமில்லை எனவும் கூறினார். நான் இதனை வெளியில் கூறாத போதிலும் நீணடகாலமாக இது தொடர்பில் மன உளைச்சலில் இருந்தேன். ராஜபக்ச ஒருவர் அத்துருகிரிய அச்சகத்தில் அச்சிடப்பட்ட பணம் ஒரு பில்லியன் ரூபாய், காப்புறுதி நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து இருக்கலாம் என நான் சந்தேகிக்கின்றேன்.

பியகமவில் உள்ள தோமஸ் டிலாரோ நிறுவனம் இலங்கை ரூபாய்களை அச்சிடும் நிறுவனம், எனினும் அந்த நிறுவனத்திற்கு வெளியில் 5 ஆயிரம் ரூபாய் நாணய தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. அவை போலி நாணயத் தாள்கள் அல்ல அசல் ரூபாய் நாணயத்தாள்களை இவர்கள் வெளியில் அச்சிட்டுள்ளனர்.

அதனை சாதாரண மனிதனோ, வங்கிகளோ அடையாளம் காண முடியாது. இது இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலரும், அன்றைய ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளும் இணைந்து செய்த வேலை. அப்போது அஜித் நிவாட் கப்ராலே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தார்.

நாங்கள் புறக்கோட்டையில் சென்று டொலர்களை கொள்வனவு செய்தோம் என அண்மையில் பசில் ராஜபக்ச கூறியிருந்தார். அச்சிடப்பட்ட பணத்தில் டொலர்களை கொள்வனவு செய்திருக்கலாம். நல்லாட்சி காலத்தில் ராஜபக்சவினர் பணத்தை கொள்ளையிட்டனர் என்பதை அப்போது இலஞ்ச ஆணைக்குழுவில் பணியாற்றிய தில்ருக்சி விக்ரமசிங்க கண்டுப்பிடித்தார்.

அந்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரின் பெயரும் இருந்ததன் காரணமாகவே தில்ருக்சியை விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கினர்.  இது தொடர்பாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோரிடம் கூறியுள்ளேன் என ரணில் ஜயசேன தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US