தந்தை ஜனாதிபதியானால் மகனும் ஜனாதிபதியாக வேண்டுமா.. இனி வாய்ப்பே இல்லை! அநுரவின் அதிரடி அறிவிப்பு
தந்தை ஜனாதிபதியாக இருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற முறைமை 2024 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துவிட்டது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கஹட்டகஸ்திகிலிய பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் பேரணில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பழைய அரசியல் முடிந்துவிட்டது
மேலும், ஊழல்வாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்குவதற்கு ஏற்ற சமூகத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தந்தை ஜனாதிபதியாகவிருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும், தந்தை பிரதமரானால் மகனும் பிரதமராக வேண்டும், தந்தை அமைச்சரானால் மகனும் அமைச்சராக வேண்டும் என்ற பழைய அரசியல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே முடிவுக்கு வந்துவிட்டது எனவும் ஜனாதிபதி அநுர குமார தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது கஹட்டகஸ்திகிலிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தை அடுத்து, நொச்சியாகம பகுதியில் இடம்பெறவுள்ள மக்கள் பேரணியில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறையில் இருப்பவரின் வாக்குமூலத்தால் மகிந்த கைது செய்யப்படலாம்! அநுராதபுர பேரணி மேடையில் இருந்து வெளியான தகவல்