பதுங்கி கொண்டுள்ள ராஜபக்சக்கள்: நாட்டில் பசி - பட்டினி - பஞ்சம் என்ற கோர நிலைமை (Video)
ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும் என்ற நிலைக்கு வந்துவிட்டது ராஜபக்சர்களின் ஆட்சி முறை. அன்று ராஜபக்சர்களின் ஆட்சி நாட்டு மக்களையே கிறுகிறுக்க வைத்தது. ஆனால் இன்று இந்த நிலைமை மாறிவிட்டது எனலாம்.
நாடு முழுவதும் போராட்டங்கள், மக்களின் அழுகுரல்கள், பசி - பட்டினி - பஞ்சம் என்ற கோரநிலைமை வந்துவிட்டது. அரசியல் அவதானிகளின் கருத்துப்படி போராட்டங்களையும் மக்களின் ஓலக் குரல்களையும் ராஜபக்ச அரசாங்கம் செவிமடுக்கவில்லை எனக் கூறுகின்றனர்.
இலங்கையில் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர்களுக்கு மறைமுகமான வெற்றி கிடைத்து வருவதாகக் கூறுகின்றனர் அரசியல் அவதானிகள். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் விரிவான தகவல்களை ஆராய்கிறது இன்றைய உண்மையின் அலசல் நிகழ்ச்சி,
