இலங்கையை ராஜபக்சக்கள்தான் தொடர்ச்சியாக ஆள வேண்டும்: ரோஹித எம்.பி
ராஜபக்சக்கள் பக்கம் நிற்பது பாவம் அல்ல. எனவே, ராஜபக்சக்கள் இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆள்வதையே நான் விரும்புகின்றேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாகவும் ராஜபக்ச ஒருவர் ஜனாதிபதியாக வருவதை நீங்கள் விரும்புகின்றீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சி தாவும் பழக்கம்
மேலும், மூன்றாவது பரம்பரையாக அல்ல ராஜபக்சக்கள் தொடர்ச்சியாகப் பதவியில் இருப்பதை விரும்புகின்றேன்.
எனக்கு கட்சி தாவும் பழக்கம் கிடையாது. ஒரே அணியில்தான் இருக்கின்றேன். மஹிந்த ராஜபக்ச என்ற தலைவர் இந்த நாட்டுக்குப் பெரும் சேவையாற்றியுள்ளார்.
எனவே, ராஜபக்சக்கள் பக்கம் நிற்பது பாவம் அல்ல. அதேவேளை, தேர்தல் ஆட்டத்துக்கு நாம் தயார்.
மட்டை தயாராகவே உள்ளது. எந்தப் பந்து வந்தாலும் அடித்தாடத் தயார். அது ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் தயார். நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
